மாடுகளை தேடி காட்டுக்குள் சென்று சிக்கிக்கொண்ட பெண்கள்.. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் பருக்குட்டி, மாயா, டார்லி ஸ்டீபன். இவர்கள் மாடு மேய்ப்பவர்கள் தினமும் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கிறார்கள். நேற்றும் சென்றனர். வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டனர். அப்போது அவர்களது மாடுகள் காட்டுக்குள் சென்றுவிட்டன. இதையடுத்து அவர்கள் மூவரும் மாடுகளைத் தேடி காட்டுக்குள் சென்றனர். ஆனால் வனப்பகுதிக்குள் சென்ற மூவரும் மாலை 4 மணி ஆகியும் திரும்பவில்லை.
எப்படி திரும்புவது என்று தெரியாமல் காட்டுக்குள் மாட்டிக் கொண்டனர். மதியம் 1 மணியளவில் மாயாவின் கணவர் செல்போனில் பேசியுள்ளார். அதன் பிறகு அவரது செல்போன் எண்ணுக்கு அழைப்பு கிடைக்கவில்லை. இதனால் காட்டுக்குள் சென்ற மூன்று பெண்களும் எங்கே போனார்கள்? அவர்களுக்கு என்ன ஆனது? அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். இதுகுறித்து 3 பெண்களின் குடும்பத்தினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, காணாமல் போன மூன்று பெண்களை தேடும் பணியை வனத்துறையினர் தொடங்கினர். தீயணைப்பு படையினரும், போலீசாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மாலையில் தொடங்கிய தேடுதல் பணி இரவு வரை தொடர்ந்தது. ஆனால் மூன்று பெண்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இருப்பினும் வனத்துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் வேட்டையை கைவிடவில்லை. அப்போது வனப்பகுதியில் சிக்கிய மூன்று பெண்களும் கண்டுபிடிக்கப்பட்டனர். வழி தெரியாமல் 6 கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். எப்படி திரும்புவது என்று தெரியாமல் அங்கேயே ஒரு இடத்தில் ஒன்றாக அமர்ந்தனர். தேடுதல் பணியில் ஈடுபட்டவர்கள் அவர்களை கண்டுபிடித்து மீட்டனர். பிடிபட்ட பெண்கள் இன்று காலை வரை காட்டிலேயே இருந்தனர். இன்று காலை விடிய விடிய அவர்களை வனத்துறையினர் வெளியே வரவழைத்தனர். பெண்களை மீட்ட குழுவினருக்கு அவர்களது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். வனப்பகுதியில் சிக்கிய பெண்களை மீட்கும் பணியில் இரவு என்றும் பாராமல் விரைந்து செயல்பட்ட வனத்துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!