கூடுதலாக 7 லட்சம் பெண்களுக்கு இன்று மகளிர் உரிமைத் தொகை...!!

 

தமிழகத்தில் செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்  ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும்  1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு ஒவ்வொரு மாதமும்  ரூ.1000 அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.  இத்திட்டத்தில் விண்ணப்பித்து மனு நிராகரிக்கப்பட்ட 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் தங்களுக்கும் ரூ.1000 பணம் வழங்க வேண்டும் என்று கேட்டு மேல்முறையீடு செய்திருந்தனர். இதில் தகுதியான மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு  இதில் 7 லட்சம் மனுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகுதி படைத்த மகளிருக்கு  நவம்பர் 10ம் தேதி  இன்று ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்று கலெக்டர் தலைமையில் விழா நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. சென்னையில் கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மகளிருக்கு ரூ.1000 வழங்கும் 2ம் கட்ட விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் நவம்பர் 12ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை வருவதையொட்டி  இன்று நவம்பர் 10ம் தேதி அவரவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர. இது குறித்த தகவல்கள்   தகுதியான பயனாளிகளின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று சோதனை அடிப்படையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மகளிருக்கு ரூ.1000 அனுப்பும் பணி தொடங்கியது.

இதன் மூலம் மொத்தம் 1 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரம் மகளிர்கள் கலைஞர் உரிமைத் திட்டத்தின் மூலம் பயன் அடைகிறார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விடுத்த செய்திக்குறிப்பில் ”மகளிர் உரிமைத் தொகை கிடைக்க பெறாதவர்கள் மறுபடியும் விண்ணப்பித்ததில் மீண்டும் அவர்களது மனு பரிசீலிக்கப்பட்டது. அதில் புதிதாக 7 லட்சம் மகளிர் அந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை அவர்களுக்கு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை வழங்க உள்ளார்.இப்போது இந்த திட்டத்தில் மொத்த பயனாளிகள் 1 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரம் மகளிர் பயன்பெற உள்ளனர். மாதம் 1000 ரூபாய் வீதம் வருடத்துக்கு ரூ12000  கிடைக்கும்.  “ எனத் தெரிவித்துள்ளார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!