undefined

அசந்த நேரத்தில் ஜவுளிக்கடையில் அமுக்கிய கில்லாடி பெண்கள்.. ஷாக் ஆன கடை உரிமையாளர்!

 

தமிழகத்தில் வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் ஜவுளிக்கடைகளில் ஆட்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஈரோட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் உள்ளிட்ட கடை வீதிகளில் புதிய ஆடைகள் வாங்க மக்கள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜவுளி வளாகத்தில் உள்ள செல்வராஜ் என்பவரது கடைக்கு மூன்று பெண்கள் துணி வாங்க வருவது போல் நடித்து ஜவுளி மூட்டையைத் திருடிச் சென்றனர். பின்னர் கடை உரிமையாளர் வாங்கிய ஜவுளியை விற்ற ஜவுளியை கணக்கிட்டு பார்த்தபோது ஆடைகள் குறைந்துள்ளது தெரிய வந்தது. சந்தேகமடைந்த உரிமையாளர், வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தார். இதில், கடைக்கு வந்த 3 பெண்கள் கடையில் இருந்த ஜவுளி மூட்டைகளை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ஈரோடு நகர காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இதில், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர்கள் பவித்ரா, கோகிலா, சுசீலா என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள துணிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!