undefined

குடும்பத் தலைவிகளுக்கு குட் நியூஸ்...  மகளிர் உரிமைத் தொகை வருமான உச்ச வரம்பு 5,00,000 ஆக உயர்வு!

 

 தமிழகம் முழுவதும்  குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ1000  மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயனர்களாக வருமான உச்சவரம்பு இதுவரை ஆண்டுக்கு 2.5லட்சமாக இருந்து வந்தது. இதனையடுத்து பலருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. தற்போது இந்த உச்சவரம்பு ரூ5 லட்சமாக உயர்த்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்  பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது 2.5 லட்சமாக உள்ள இந்த வரம்பு, பல பெண்களை உரிமைத் தொகையிலிருந்து விலக்கி வைத்துள்ளது. இந்த உச்சவரம்பு உயர்வு, அதிக வருமானம் இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் இந்தத் திட்டத்தின் பயன்களை அடைய முடியும்.  கடந்த செப்டம்பர் 15, 2023ல் காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். நடப்பாண்டில் செப்டம்பர் 15ம் தேதி இந்தத் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உயர்வு, பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.  மேலும், இது பெண்களின் சமூகப் பங்களிப்பை அதிகரிக்கவும் உதவும்.இந்த முடிவு, அரசு பெண்களின் நலனை முன்னிறுத்தி செயல்படுவதற்கான சான்றாக அமைந்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டம் போன்ற திட்டங்கள், பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை