மகளிர் உரிமைத் தொகை...   லேட்டஸ்ட் அப்டேட்...!!

 

 தமிழகத்தில் திமுக தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு மாதம் ரூ1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளில் அவரது சொந்த ஊரான காஞ்சிபுரத்தில்  முதல்வரால் தொடங்கப்பட்டது.  இதற்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் பெறப்பட்டு   மகளிர்‌ உரிமைத்தொகைத்‌ திட்டத்திற்கு‌ தகுதியான பயனாளிகளைக்‌ கண்டறிவதற்கான விதிமுறைகள்‌ வகுக்கப்பட்டன. 1.63 கோடி விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு, விசாரணைகள்‌ மேற்கொள்ளப்பட்டன.

அவற்றில்‌ 1.06 கோடி தகுதியான பயனாளிகள்‌ தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான உரிமைத்‌ தொகை  ஒவ்வொருவருக்கும்‌ தலா ரூ 1000/- வீதம்‌ முதல்‌ தவணை   அவர்களின்‌ வங்கிக்‌ கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது.  அதேசமயம் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடங்கி  நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு  செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து, அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கப்பட்டது.  

இந்த மாதத்தில் தீபாவளி வருவதை முன்னிட்டு அதற்கு முன்பே ரூ1000 வழங்கும்படி முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு நவம்பர் 10ம் தேதிக்குள் அவர்களின் வங்கிக்கணக்கில்  ரூ. 1000 வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.  விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு  குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது. மேல்முறையீட்டில் தகுதியானவர்களுக்கான  ரூ.1000 வழங்கும் திட்டம்  நவம்பர் 10ம் தேதி மரக்காணத்தில் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!