undefined

ஷாக்... 100 மதுபானக் கடைகளை ஏலம் எடுத்த பெண்கள்!!

 

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மதுக்கடைகள் மூலம் அரசுக்கு கணிசமான வருவாய் இருந்து வருகிறது. அந்த வகையில் தெலங்கானாவில் மாநிலம் முழுவதும் உள்ள 2,620 மதுக்கடைகளை ஏலம் விடுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில்  விண்ணப்ப படிவத்திற்கு ரூ.2 லட்சம் கட்டணமாக செலுத்த வேண்டும்.   விண்ணப்பத்திற்கு செலுத்தப்பட்ட கட்டணம், திரும்ப வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.  

மதுக்கடை ஏலம் எடுப்பதற்காக 1.32 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் ஏராளமான பெண்களும் மதுக்கடை ஏலம் கேட்டு விண்ணப்பித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  விண்ணப்ப படிவம் மூலம் ஒரு சொட்டு மருந்து கூட விற்பனை செய்யாமலேயே தெலங்கானா அரசுக்கு ரூ.2,639 கோடி வருவாய் கிடைத்தது.இந்நிலையில மதுக்கடைகளுக்கான ஏலத்தில்   விண்ணப்பம் செய்தவர்களில்   மாநிலம் முழுவதும் 100 மதுபானக் கடைகளை பெண்கள் ஏலம் எடுத்தனர். இது கலால் அதிகாரிகளிடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நகரப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கான போட்டி நடைபெற்றது.

அதிகபட்சமாக சரூர்நகர் 14, ஹைதராபாத் 13, கேதராபாத் 8, ஷம்ஷாபாத் 7 கடைகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளை போல அல்லாமல்  நடப்பாண்டில் அதிக அளவில் பெண்கள் மதுபான கடைகள் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தனர். அதிக எண்ணிக்கையிலான பெண்கள் ஏலத்திலும் கலந்து கொண்டனர்.  இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் மதுபானக் கடைகளுக்கு எதிராக பெண்கள் போராடி வரும் நிலையில் 100 கடைகள் பெண்கள்  ஏலம் எடுத்திருப்பது தெலங்கானா மாநில மக்களை வியப்பில்   ஆழ்த்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை