undefined

முகம் சிதைந்த நிலையில் நிர்வாணமாக கிடந்த பெண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை!

 

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பாப்பிரெட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் நேற்று வழக்கம்போல் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கால்நடைகளை மேய்க்க சென்றனர். அப்போது, ​​முகம் சிதைந்த நிலையில் மறைவான இடத்தில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்த பெண் முகம் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக கிடந்தார். எனவே, கல்லால் தாக்கி கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

அவள் கையில் வரைந்திருந்த ‘டாட்டூ’வை வைத்து விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் அதே பகுதியை சேர்ந்த நசீர் என்பவரின் மனைவி கரிமுனிஷா (30) என்பது தெரியவந்தது. பின்னர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து எஸ்பி வித்யாசாகர் தலைமையிலான போலீசார் கரிமுனிஷாவை கொன்றவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், கரிமுனிஷாவின் கணவர் நசீர் ஒரு வழக்கில் சிறைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்ற நபருக்கும் சிறையில் நட்பு ஏற்பட்டது. அதன்பின், சில நாட்கள் கழித்து சிறையில் இருந்து வெளியே வந்த பாஸ்கர், நசீரை சந்திக்க அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் நேற்று கரிம்முனிஷா இறந்து கிடந்த நிலையில் பாஸ்கர் திடீரென மாயமானார். எனவே, இந்த கொலையில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து அவரை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஸ்கரை கைது செய்த பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!