undefined

பாலியல் தொந்தரவால் பெண் இறந்த விவகாரம்.. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

 

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 48 வயது பெண். கணவர் இறந்துவிட்டதால், அம்மா வீட்டில் வந்து தங்கியிருந்த நிலையில், அம்மா இறந்த பிறகு, அவர் நடத்தி வந்த பெட்டிக்கடையை நடத்தி வந்தார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவர் அடிக்கடி பெட்டிக்கடைக்கு சென்று அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு பெட்டிக்கடையில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், அந்த நபர் 48 வயதுடைய பெண்ணைத் தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதையடுத்து பெட்டிக்கடை முன் படுகாயம் அடைந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் ஆட்டோவில் ஏற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில்,  அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என நீதிபதி அனுராதா அறிவித்து ஆயுள் தண்டனையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை