undefined

மசாஜ் சென்டரில் வேலை பார்த்து வந்த இளம் பெண் தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை!

 

பெங்களூருவில் உள்ள மசாஜ் சென்டரில் பணியாற்றி வந்த டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்தவர் மோனிகா (24). இரண்டு மாதங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு வேலைக்காக வந்திருந்தார். எட்டாவது மைல் பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் மாதம் ரூ.30,000 சம்பளத்தில் சேர்ந்தார்.

பாகல்குண்டே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். நேற்று காலை  பணிக்கு வரவில்லை. இதனால் மசாஜ் சென்டர் உரிமையாளர் மோனிகாவின் மொபைல் எண்ணுக்கு போன் செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த மசாஜ் சென்டர் உரிமையாளர் மோனிகா தங்கியிருந்த வீட்டிற்கு சென்றார்.

கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பலமுறை தட்டியும் திறக்கவில்லை. இதனால் அவர் பாகல்குண்டே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மோனிகா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டது என்பது தெரியவந்துள்ளது. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. மசாஜ் சென்டர் உரிமையாளர் மற்றும் சக ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!