undefined

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்... திக்..திக் நிமிடங்கள்!!

 

திண்டுக்கல் மாவட்டம் பழனி  பேருளூர் கிராமத்தில் வசித்து வருபவர்  கல்பனா .இவருக்கு வயது 25. நிறைமாத கர்ப்பமாக இருந்த கல்பனா   தனது குடும்ப உறுப்பினர்கள் 13 பேருடன் திருப்பதி கோவிலுக்கு சென்றிருந்தார். அங்கு  சாமி தரிசனம் முடிந்த பிறகு கேரளா எக்ஸ்பிரசில்  சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது  கல்பனாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.


 
இதனால் வேறு வழியின்றி பயணிகள் சிலர் கல்பனாவுக்கு பிரசவம் பார்த்தனர். ஓடும் ரயிலில் கல்பனாவிற்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் இது குறித்து காட்பாடி ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில்  காட்பாடி ரயில் நிலையத்தில் மருத்துவ குழுவினர் மற்றும் காட்பாடி ரயில்வே போலீசார்  தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.  


ரயில் காட்பாடி சென்றடைந்ததும்  108 ஆம்புலன்ஸ் மூலம் கல்பனா மற்றும் அவரது குழந்தை இருவரும்  பிரம்மபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.  அங்கு தாய் மற்றும் குழந்தை இருவரும்  நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஓடும் இரயிலில் பெண்ணுக்கு பிரசவமான சம்பவம்  ரயில் நிலையத்தில்  நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!