undefined

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் உயிரிழப்பு.. மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என குடும்பத்தினர் போராட்டம்!

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பனைமடல் பகுதியை சேர்ந்தவர் முருகன் லாரி டிரைவர். இவரது மனைவி செல்லம். இந்த தம்பதிக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 14ம் தேதி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் ஐந்தாவது குழந்தை பிறந்தது. குழந்தை இயற்கையாக பிறந்ததையடுத்து செல்லத்திற்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர் மருத்துவர்கள். அதன் பிறகு அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மேல் சிகிச்சைக்காக செல்லம் சேலம் அரசு   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி செல்லம் உயிரிழந்தார். ஆத்தூர் அரசு மருத்துவமனையில் நடந்த குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையே காரணம் எனக்கூறி அவரது உறவினர்கள் நேற்று கருமந்துறை-ஏத்தாப்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்த செல்லத்தின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், தவறான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இரண்டாவது நாளாக இன்றும் முற்றுகையிட்டு வருகின்றனர். இறந்த பெண்ணின் பிரேதப் பரிசோதனை மருத்துவக் குழுவால் செய்யப்பட வேண்டும். குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக் கோரி, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு குவிந்திருந்த உதவி கமிஷனர் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!