பட்டப்பகலில் பெண் கவுன்சிலர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை!

 

ஈக்வடார் நாட்டில், பட்டப்பகலில் இளம்பெண் கவுன்சிலர் ஒருவர், நடுரோட்டில் பொதுமக்கள் மத்தியில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈக்வடார் நாட்டில் நரஞ்சல் நகர கவுன்சிலராக பதவி வகித்து வருபவர் டயானா கார்னெரோ (29). நகர கவுன்சில் கூட்டம் முடித்து மதியத்திற்கு மேல் சாலையின் மோசமான நிலை குறித்து காணொளி ஒன்றை டயானா பதிவு செய்து வந்த போது திடீரென அவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். 

மோட்டார் சைக்கிளில் அவரை நெருங்கிய 2 மர்ம நபர்கள், துப்பாக்கியால் அவரது தலையில் திடீரென சுட்டு விட்டு மாயமாகி உள்ளனர். இது குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்திருந்தும், இதுவரை கைது நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

போதை மருந்து கடத்தல் குழுவினரால் ஈக்வடாரில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அதிபர் வேட்பாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னர், குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.

இரண்டு வாரங்கள் முன்னர் தான் நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்வதாக அதிபர் டேனியல் நோபோவா அறிவித்திருந்தார். பெரும்பாலான மக்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். பாடசாலைகள் அங்காடிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், பெரும் நகரங்களில் ராணுவம் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!