undefined

திருச்சியில் பெண் காவலர் உயிரிழப்பு.. முதல்வர் ரூ.25 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு!

 

திருச்சியில், குடிபோதையில் வாகனம்  ஓட்டிய ஒருவர் மோதி உயிரிழந்த பெண் காவலர் சுப ப்ரியாவின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி அறிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் சுப ப்ரியா(23) (காவலர் எண்.1680). தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படை பெண் காவலராக பணியாற்றி வந்த சுப ப்ரியா, நேற்று முன் தினம் இரவு சுமார்  8.30 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த இரட்டைவயல் கிராமத்தில் கண்ணமுடையார் அய்யனார் கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு விட்டு, பணி முடிந்து வீடு திரும்பி நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த இருசக்கர வாகனம் சுப ப்ரியா மீது மோதியது. இருசக்கர வாகன ஓட்டி மதுபோதையில் இருந்தது தெரிய வந்தது. 

வாகனம் வேகமாக மோதியதில், தலையில் பலத்த காயமடைந்து, பேராவூரணி அரசு மருத்துவமனையில் சுப ப்ரியாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தகவலறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண் காவலரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து, ரூ.25 லட்சம் நிவாரண நிதியை அறிவித்தார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுபபிரியா பணி முடிந்து செல்லும் போது, விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

சுபபிரியாவின் உயிரிழப்பு, தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். சுபபிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா