undefined

’பொய்யான செய்தி பரப்பிய விக்கிபீடியா’.. ரூ.2 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஏஎன்ஐ நீதிமன்றத்தில் முறையீடு!

 

பிரபல செய்தி நிறுவனமான ஏஎன்ஐ டெல்லி உயர்நீதிமன்றத்தில் விக்கிப்பீடியாவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.அதாவது ஏஎன்ஐ செய்தி நிறுவனம் மத்திய அரசின் லாபிங் கருவியாக செயல்பட்டு வருவதாக விக்கிபீடியா தளத்தில் கூறப்பட்டிருந்தது. நாடு முழுவதும் உள்ள செய்தி நிறுவனங்கள் பொய்யான செய்திகளையும் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளையும் பரப்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இதை எதிர்த்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.

அதில், எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிய விக்கிபீடியா நிறுவனம் ரூ. 2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இந்த வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்கிபீடியா தனது கருத்தை தெரிவிக்க உரிமை உள்ளது. கருத்து தெரிவிப்பதற்கு முன் அதன் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு விக்கிப்பீடியாவுக்கு நோட்டீஸ் அனுப்பக் கோரி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!