undefined

இன்ஸ்டா ரீல்சுக்கு அடிமையான மனைவி.. ஆத்திரத்தில் அரிவாளால் ஒரே போடு.. கணவர் வெறிச்செயல்!

 

கர்நாடக மாநிலம் உடுப்பி பிரம்மவர்சாலி கிராமத்தில் வசிப்பவர்கள் கிரண் உபாத்யா (30), ஜெயஸ்ரீ (28). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதற்கிடையில், ரீல்ஸ் செய்ய அடிமையான ஜெயஸ்ரீ, எப்போதும் இன்ஸ்டாகிராமில் மூழ்கிவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து நேற்று கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தூங்கச் சென்றனர். இதையடுத்து ஜெயஸ்ரீ மீண்டும் அதிகாலையில் செல்போனை பயன்படுத்தியதால் தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ​​ஆத்திரமடைந்த கணவர் கிரண், ஜெயஸ்ரீயை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக கீழே விழுந்தார்.

தகவல் அறிந்ததும் கோட்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் கிரணை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை