undefined

பவதாரணி இறுதிச் சடங்கில் கங்கை அமரன் கலந்துகொள்ளாதது  ஏன்....?  

 

தமிழ் திரையுலகில் பிண்ணனி பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத் திறமை வாய்ந்த இசைஞானி இளையராஜாவின்  செல்ல மகளான பவதாரிணி கல்லீரல் புற்றுநோய் காரணமாக ஜனவரி 25ம் தேதி உயிரிழந்தார். இவர்  இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி பவதாரணி ஜனவரி 25ம் தேதி மாலை உயிரிழந்தார். இவருடைய திடீர் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் மிகுந்த  சோகத்தில் ஆழ்த்தியது. பவதாரணியின் உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு திரையுலகினர்  பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அத்துடன்  ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினர் பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.  இதனையடுத்து இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைப்புரம் கொண்டு செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.  

இந்த இறுதி சடங்கில் இளையராஜாவின் சொந்த தம்பி கங்கை அமரன் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.  இளையராஜா பொதுவாகவே ஷார்ட் டெம்பர் குணம். எதற்கெடுத்தாலும் சட்டென கோபப்பட்டு விடுவார். இதில்  அண்ணன், தம்பி ,பிள்ளைகள் என யாரும் விதிவிலக்கு அல்ல என்கின்றனர் நெருக்கமானவர்கள். அடுத்தவர்கள் மனம் புண்படுமே என உணராமல் விஷயத்தை நேருக்கு நேர் கூறிவிடும் மனோபாவம் உடையவர் எனக் கூறுகின்றனர். இதே போல் பலப்பல விஷயங்களில் தம்பி  கங்கை அமரனை மட்டம் தட்டி பேசியதும் நடத்தியதும் உண்டு.திரையுலகில் பலருக்கு இதே நடந்தாலும் யாரும் அடிவாங்கியதை வெளியில் சொன்னதில்லை.   அண்ணனுக்காகவும் அவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைகாகவும் பல விஷயங்களை கங்கை அமரன் விட்டுக் கொடுத்து போய்விடுவார்.

இதனை  இளையராஜா புரிந்து கொள்ளாமல்  தம்பி என்றும் பாராமல் ஒரு கட்டத்தில் அடிக்காத குறையாய்... அவரிடம் சண்டை போடு, திட்டி வெளியே அனுப்பிவிட்டார்.  இதே கோபம் இன்னும் நீடிக்கிறது.  கடந்த ஆண்டு இளையராஜாவின் பிறந்தநாளுக்கு பிள்ளைகள் ஆசைப்பட்டதால் கலந்து கொண்டதாக  கூறப்படுகிறது.  இதனால்  மீண்டும் இருவருக்கும் இடையே வந்த பிரச்சனை வந்த நிலையில்  பேச்சுவார்த்தை அற்று போனது. கங்கை அமரனுக்கு பவதாரணி மேல் பிரியம் மிகமிக அதிகம். இருந்தாலும் அண்ணன்  இளையராஜா தன்னைப் பார்த்தால் மீண்டும் கோபப்படுவார்... எந்த பிரச்சனையும் நடக்க கூடாது என்பதற்காகவே,  தூக்கி வளர்த்த ஆசை மகனின் இறுதி சடங்கில் கூட கங்கை அமரன் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க