விக்கிரவாண்டியில் வெற்றி யாருக்கு.... கருத்துக்கணிப்பு முடிவுகள்!

 

 தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது. நாளை மறுநாள் ஜூலை 10ம் தேதி புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குசாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.  


நடைபெற உள்ள விக்கிரபாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து  மக்கள் ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த கருத்துக்கணிப்பில் திமுக - 56.6%, பாமக - 37.5%, நாம் தமிழர் - 4.0% வாக்குகளை பெறலாம் எனக்  கூறப்பட்டுள்ளது.  அதிமுக வாக்குகளில் பாமகவிற்கு 52.2% வாக்குகளும், திமுகவிற்கு 37.3% வாக்குகளும், நாம் தமிழருக்கு 6.0 வாக்குகளும் பெறலாம் என  கருத்துக்கணிப்பில் தெரிவிகக்ப்பட்டுள்ளது.  

மேலும் கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்ததில் 52.3%, வாக்காளர்கள் பாமகவிற்கு வாக்களிக்கலாம்.  அதிமுக அதிகாரப்பூர்வமாக தேர்தலை புறக்கணிப்பதாக கூறினாலும், அதிமுகவிற்கு வாக்களித்தவர்கள் பெரும்பான்மையானோர் பாமகவிற்கே வாக்களிக்க தயாராக இருப்பதாகக் கூறினர்.  ஜாதி, மதம், ஊடகம் கட்சி   முக்கிய காரணங்களாக இந்த தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவற்றைத் தாண்டி பணமும் மிகப்பெரிய தாக்கத்தை இந்த தேர்தலில் ஏற்படுத்துகிறது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!