undefined

உங்க வீட்டிற்கு எந்த பிள்ளையாரை அழைத்து வந்தால் அதிர்ஷ்டம் கைகூடும்?!

 

நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்திக் கொண்டாடப்பட உள்ள நிலையில், கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கியுள்ளது. இந்நிலையில், நாளை நல்ல நேரம் பார்த்து, நம் வீட்டிற்கு எந்த பிள்ளையாரை அழைத்து வந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம் வாங்க.

நம் தினமாலை வாசகர்களுக்காக பிரத்யேகமாக பகிரப்படும் இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஒவ்வொரு விநாயகருக்கும் தனித்தனி விசேஷம் உண்டு. எந்தெந்த பிள்ளையார் என்னென்ன பலன்களைத் தருவார் எனத் தெரிந்து கொள்ளுங்க. 

விநாயகர் என்றால் விக்னங்களை தீர்ப்பவர். சங்கடங்களை போக்குபவர். இவரே அனைவருக்கும் பிடித்த கடவுளாக அவதாரம் எடுத்திருக்கிறார். எந்த பொருளில் எப்படி பிடித்து எந்த உருவத்தில் வணங்கினாலும் விநாயகர் அருள் செய்வார் என்பதே இவரின் சிறப்பு.

பிள்ளையார், விநாயகர், கணபதி, கணேசன் என பல்வேறு பெயர்களால் வணங்கி வரும் விநாயகர் தாய், தந்தையின் பேச்சைக் கேட்டு, அவர்களை மதித்து கீழ்படிந்து செயல்பட்ட பிள்ளை என்பதால் தான் இவரை பிள்ளையார் என்கிறோம். சிவ மற்றும் விஷ்ணு என அனைத்து ஆலயங்களிலும் முழு முதற் கடவுள் இவரே.

களிமண், கல் மட்டுமல்ல பசு மாட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்தாலும் சரி, மஞ்சளில் பிடித்து வைத்தாலும் சரி அனைத்து வித நலன்களை அள்ளித் தருவார் விக்னேஷ்வரர் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.

களிமண் பிள்ளையார்- ஆரோக்கியம்

கருங்கல் பிள்ளையார்- காரிய சித்தி

விபூதி பிள்ளையார்- உஷ்ண நோய்களை தீர்ப்பார்.

குங்கும பிள்ளையார்- செவ்வாய் தோஷம் தீரும்.

சந்தன பிள்ளையார்- குழந்தைப் பேறு

உப்பு பிள்ளையார்- பகைவர்களிடமிருந்து காப்பார்.

வெல்லப் பிள்ளையார்- உடலில் உள்ள கொப்பளங்கள் மறையும்.

சர்க்கரைப் பிள்ளையார்- வீட்டில் இனிமையான தருணங்கள்

மஞ்சள் பிள்ளையார்- சகல செளபாக்கியங்கள்

பசுஞ்சாணப் பிள்ளையார்- தோஷங்கள் நீங்கும்.

வெள்ளெருக்கு பிள்ளையார்- பில்லி சூனியம் அகலும்.

வாழைப்பழ பிள்ளையார்- கணவன் – மனைவி ஒற்றுமை பலன்களை அறிந்து, அதற்கேற்ப செய்யப்பட்ட விநாயகரை வழிபடுவோம்.

விநாயகரை வழிபடும் போது, விநாயகருக்கான காயத்ரி மந்திரத்தை சொல்லி அவர் அருள் பெறுவதை மறந்துடாதீங்க. 

விநாயகருக்கான காயத்ரி மந்திரம் :

‘ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்’
ஓம் விநாயகா போற்றி!

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா