பெட்ரோல் போட்டு முடித்ததும் கைவரிசை.. அரிவாளை காட்டி மிரட்டி பங்க் ஊழியரிடம் கொள்ளை முயற்சி!

 

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்துள்ளது வாகைகுளம் கிராமம். இங்கு நெல்லை-கன்னியாகுமரி தேசிய நான்கு வழிச்சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது.குறிப்பாக சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் ஏராளமானோர் பெட்ரோல், டீசல் நிரப்புகின்றனர். இதனால் அப்பகுதி எப்போதும் பரபரப்பான இடமாக உள்ளது. இந்நிலையில், கடந்த 9ம் தேதி இரவு ஊழியர் முருகன் (45) அங்கு வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர்,  பெட்ரோல் போட்டுள்ளனர். ஊழியர் முருகன் பெட்ரோல் ஊற்றி முடித்ததும், பின்னால் வந்தவர் திடீரென இறங்கி, மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு, ஊழியர் முருகனை வெட்ட உயர்த்திய அரிவாளுடன் முன்னோக்கி ஓடினார்.மேலும் அவரிடம் இருந்த பணப்பையை பறிக்க முயன்றார்.  உஷாரான ஊழியர், கையில் பணப்பையுடன் அவர்களிடமிருந்து தப்பி ஓடி அருகில் இருந்த பெட்ரோல் பங்க் அலுவலகத்திற்குள் ஓடினார். உடனே அங்கிருந்த சக ஊழியர்கள் வெளியே வருவதற்குள் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வாகனத்தை எடுக்க அரிவாளுடன் பின்னால் வந்த நபரை துரத்திச் சென்று இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக நாங்குநேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பெட்ரோல் பங்கில் பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்பேரில் நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பட்டப்பகலில் இருவர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு இதே பெட்ரோல் பங்க் அலுவலகத்தில் மர்ம நபர்களால் ரூ.1.5 லட்சம் திருட்டு சம்பவம் நடந்தது.  இன்னும் அதற்கு தீர்வு காணப்படாத நிலையில், தற்போது இரண்டாவது முறையாக ஊழியர் ஒருவரை கத்தியை காட்டி கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நெல்லை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து இதுபோன்ற பயங்கர கொள்ளை, கொலை முயற்சி சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளுக்கு போதிய பாதுகாப்பு அளித்து அச்சமின்றி பயணிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!