undefined

’ட்ரம்ப் அதிபராக பதவியேற்றதும்.. அதானி வழக்கு முடிவுக்கு வரலாம்’.. வழக்கறிஞர் பரபரப்பு பேச்சு!

 

இந்தியாவில் சூரிய ஒளி மின்சாரம் வழங்கும் ஒப்பந்தத்தைப் பெற தொழிலதிபர் கெளதம் அதானி ரூ.2,239 கோடி ($265 மில்லியன்) லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக அமெரிக்க நீதித்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்த லஞ்சம் 2020 முதல் 2024 வரை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த உண்மை அமெரிக்க வங்கிகள் மற்றும் சூரிய ஒளி மின் திட்டத்திற்காக பில்லியன்களை திரட்டிய முதலீட்டாளர்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தை காரணம் காட்டி, அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25,000 கோடி ரூபாய் கடன் மற்றும் பத்திரங்கள் மூலம் அதானி குழுமம் திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதானியின் நடவடிக்கைகள் அந்நிய முதலீட்டு சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது என்று நியூயார்க்கில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கவுதம் அதானியைத் தவிர, அவரது உறவினர்கள் சாகர் அதானி, வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் பெயரிடப்பட்டுள்ளனர். இதே புகாரில் கௌதம் அதானி மற்றும் பலர் மீது அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமும் வழக்கு பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில், இந்த குற்றச்சாட்டை அதானி தரப்பு மறுத்துள்ளது. அதானி இந்திய அரசியலிலும் புயலை உருவாக்க ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில், “டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு அதானி குழுமத்தின் மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்படலாம்” என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க வழக்கறிஞர் ரவி பத்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒவ்வொரு புதிய அதிபரும் தான் பதவியேற்கும் போது தனது புதிய அணியை கொண்டு வருவார்கள். அதேபோல் டிரம்பும் தனது புதிய அணியை கொண்டு வருவார். தற்போதைய எப்.பி.ஐ செயல்பாடுகளால் ஏற்கனவே அதிருப்தியில் உள்ளார். பொதுவாக எப்.பி.ஐ. அவர்களை அமைச்சரவையில் சேர்க்கிறது.

ஆனால், டிரம்ப் அதற்கெல்லாம்  மறுத்துவிட்டார். அதாவது, யாரை விசாரிக்க வேண்டும் என்பதை டிரம்ப் முடிவு செய்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரியில் டிரம்ப் அதிபராக பதவியேற்கும் போது, ​​அதானி தரப்பு இந்த பிரச்சினையை எழுப்பலாம். "அதானிக்கு எதிரான கிரிமினல் அல்லது சிவில் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை அல்லது குறைபாடுள்ளவை என்று டிரம்ப் நிர்வாகம் கருதினால், வழக்குகள் திரும்பப் பெறப்படலாம்," என்று அவர் கூறினார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!