undefined

டிஜே பாட்டுக்கு நடமாடிய போது விபரீதம்.. மணமகனுக்கு நேர்ந்த சோகம்.. கதறும் குடும்பம்!

 

உத்தரபிரதேசத்தில் உள்ள போஜ்பூர் கிராமத்தில் நவம்பர் 17 ஆம் தேதி இரவு மணமகன் சிவம் (21) தனது திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு நடனமாடும்போது மாரடைப்பால் இறந்தார். இன்று, அவரது திருமண ஊர்வலம் நடக்க இருந்தது, ஆனால் இறுதியில் அது இறுதி ஊர்வலமாக மாறியது.

போஜ்பூரில் வசிக்கும் சிவம், தனியார் பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நவம்பர் 17ம் தேதி உறவினர்கள் அனைவரும் வீட்டில் கூடியிருந்தனர். மாலையில், திருமண விழா முடிந்ததும், குடும்ப உறுப்பினர்களும் சில கிராம மக்களும் வீட்டில் டிஜே இசைக்கு நடனமாடிக்கொண்டிருந்தனர். சிவமும் நடனமாடி சோர்வாக அமர்ந்து திடீரென தரையில் விழுந்தார்.

குடும்பத்தினர் அவரை முதலில் ஹத்ராஸில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர், பின்னர் காலை 10.30 மணியளவில் பாக்லா மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். சிவத்தின் தந்தை சாஹேப் சிங் 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருக்கு ரஷீத் மற்றும் சூரஜ் என்ற இரு சகோதரர்கள் உள்ளனர். அதிக சத்தம் காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், அப்பகுதியில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!