undefined

 சிக்கன் பிரியாணியில் பூரான்!!  வாடிக்கையாளர் அதிர்ச்சி!! 

 

அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் உணவாக மாறியுள்ளது பிரியாணி. பிரியாணியை விரும்பி சாப்பிடாத அசைவ பிரியர்களே இருக்க முடியாது. ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவு பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதும் பிரியாணிதான். இதனால் சென்னை உள்ளிட்ட இடங்களில் பிரியாணி கடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.  

இதனால் பிரியாணி பலரும் விரும்பி உண்ணும் உணவாக உள்ளது. எனினும் அவ்வப்போது தரமற்ற வகையில் வழங்கப்படும் பிரியாணியால் தொடர் சர்ச்சைகளும் நிலவி வருகிறது.

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் உள்ள ஒரு கடையில் வாடிக்கையாளர் ஒருவர் பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளார். அதில் ஒரு பூரான் இறந்து கிடந்துள்ளது. பிரியாணியில் கருப்பு நிறத்தில் பூராண் இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து அவர் கடைக்காரரிடம் கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்படுகிறது.  அவர் கிட்டதட்ட பிரியாணியை சாப்பிட்டு முடித்த பிறகு தான் பூரான் கிடப்பது தெரியவந்தது.

கடையில் ஒருவர் பிரியாணி எனவே  உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் சாத்தான்குளம் பகுதி ஹோட்டல் மற்றும்  உணவு சார்ந்த கடைகளில் ஆய்வு நடத்திட வேண்டும்.  உணவு பாதுகாப்பு இல்லாமலும், ஹோட்டல்கள்  சுகாதாரம் குறைவாக இருந்தால் அவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் என சமூக  ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்