undefined

கோவிலுக்கு சென்றபோது விபரீதம்.. மணல் அள்ளிய பள்ளத்தில் இறங்கிய இரு சிறுமிகள் பரிதாப பலி!

 

புதுக்கோட்டை மாவட்டம் கண்ணகோன்பட்டி கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி கனகா. இந்த தம்பதிக்கு காயத்ரி, கஸ்தூரி, கவிஸ்ரீ, துர்கா என 4 மகள்கள் உள்ளனர். அங்குள்ள பள்ளியில் காயத்ரி எட்டாவதும், கவிஸ்ரீ எல்கேஜியும் படித்துள்ளனர். இருவரும் அங்குள்ள காளியம்மன் கோவிலுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்ததாக தெரிகிறது. அம்மா சொன்னபடியே சென்றுள்ளனர்.

கலக்குளம் பகுதி வழியாக கோயிலுக்குச் சென்ற சிறுமிகள் மழையால் தண்ணீர் நிரம்பிய குளத்தில் இறங்கினர்.தண்ணீர் அதிகம் இருப்பதை உணராத சிறுமிகள் மணல் அள்ளியதால் ஏற்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். 2 மணி நேரமாகியும் குழந்தைகள் வராததால் குடும்பத்தினர் பீதியுடன் குளத்துக்குச் சென்று பார்த்தபோது சிறுமிகள் சடலமாக மிதந்தனர்.

பீதியடைந்த மக்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் சிறுமிகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு அவர்களின் மரணம் உறுதி செய்யப்பட்டது. சிறுமிகள் இறந்ததை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது, பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!