தண்ணீர் விடுவதற்காக சென்ற போது விபரீதம்.. மின்சாரம் தாக்கி பம்ப் ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே பலி!
ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பம்ப் ஆப்ரேட்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம், புதுமனைப் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (42). இவர் அதே ஊராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி பம்ப் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.
வழக்கம் போல காலை நேரத்தில் கிராம மக்களுக்கு தண்ணீர் விடுவதற்கு சென்றுள்ளார். அப்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் வைக்கப்பட்டுள்ள மோட்டாரில் இருந்து சுவிட்ச் பாக்ஸ் செல்லக்கூடிய மின் ஒயர் பழுதாகி இருப்பது தெரியாமல் இன்று காலை தண்ணீர் விடுவதற்காக சுவிட்ச் ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி சுகுமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உமராபாத் போலீசார் சுகுமாரை பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!