undefined

சாலை கடக்க முயன்ற போது விபரீதம்.. வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு!

 

சிங்காரப்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் புள்ளி மான் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அடுத்த குரங்குக்கல் மேடு  பகுதியில் பெருமாள் கோவில் மலை அடிவாரத்தில் சிங்காரப்பேட்டை திருப்பத்தூர்  செல்லும் சாலையை சுமார் இரண்டரை வயது கொண்ட  புள்ளிமான் ஒன்று  கடக்க முயன்றது.

அப்போது, அடையாளம் தெரியாத வாகனம்  மோதி  சாலையோரத்தில் விழுந்து பலியாகி உள்ளது.  சம்பவ இடத்திற்கு வந்த சிங்கராபேட்டை  வனத்துறையினர் இறந்த ஆண் புள்ளி மான் சடலத்தை மீட்டு வனத்துறை அலுவலகத்தில் பிரேத பரிசோதனை செய்து  நல்அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிங்காரப்பேட்டை பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்திருத்து வருகிறது.

அவ்வப்போது மயில்,மான், உள்ளிட்ட வனவிலங்குகளை நாய்கள் கடித்து வருவதாகவும், இதனால் நாய்களுக்கு பயந்து சாலையை கடக்கும் பொழுது விபத்து ஏற்படுவதாகவும் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!