மின்கம்பத்தில் திருட முயன்ற போது விபரீதம்.. மின்சாரம் தாக்கி இளைஞர் துடி துடித்து பலி!
ராமேஸ்வரம் பிரப்பன்வலசையில் மின்கம்பத்தில் இருந்து காப்பர் ஒயர்களை திருட முயன்ற இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பிரப்பன்வலசை கிராமத்தில் உயர் மின் அழுத்த மின் கம்பி உள்ளது. இன்று காலை அந்த வழியாக செல்லும் மின்கம்பத்தில் ஏறி தாமிர கம்பியை திருட முயன்ற இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
சம்மந்தப்பட்ட மின்வாரிய ஊழியர்கள், தீயில் கருகியவரின் உடலை மீட்டனர். பின்னர், இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து உச்சிப் புளி போலீஸார் விசாரணை நடத்தினர்.
இறந்த வாலிபர் ராமநாதபுரம் மஞ்சன மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் (35) என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் மின் கம்பி திருட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!