undefined

“ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காதுன்னு சொன்ன வாக்குறுதி என்னாச்சு?”  தாமக யுவராஜா கேள்வி!

 

ஒரு நாள் பெய்த இந்த சிறிய மழைக்கே சென்னை திணறுகிறது. ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது  என்ற  வாக்குறுதி என்ன ஆனது? என்று த.மா.கா. மாநில பொதுச் செயலாளர் யுவராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தாெடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னையில் மழைப்பொழிவு மற்றும் முறையான வடிகால் கட்டமைப்புகள் இல்லாமை ஆகியவற்றின் காரணமாக சென்னை மாநகரத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு பெரும் வேதனையளிக்கிறது. தமிழகத்தின் தலைநகரமாகவும், மக்கள் அடர்த்தி மிகுந்த தொழில் நகரமாகவும் விளங்கும் சென்னையில் அடிப்படைக் கட்டுமானம் இல்லாததன் விளைவை ஒவ்வொரு ஆண்டும் மக்கள் அனுபவித்து வருவது வேதனையளிக்கிறது.

சென்னை மாநகரம் நேற்று 25.09.2024 பெய்த சிறிய மழைக்கு மீண்டும் வெள்ளக்காடாக மாறியது. திமுக அரசால் திட்டமிடப்பட்ட 4000 கோடி ரூபாய் மதிப்பிலான மழைநீர் வடிகால் பணிகள் என்ன ஆனது? தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. தேர்தல் வாக்குறுதியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காத அளவுக்கு சென்னையை மாற்றுவோம் என்று வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் எந்த ஒரு கட்டமைப்பு வேலைகளையும் இந்த அரசு இன்றுவரையிலும் ஏற்படுத்தவில்லை. 

மாறாக தமிழக அரசு குறிப்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கடந்த மாதம் மக்களுடைய வரிப்பணத்தில் அவசியம் இல்லாத கார் பந்தயத்தை நடத்தினார்கள். கார் பந்தயம் நடத்துவதற்கு என்று முறையான இடம் சென்னையில் உள்ளது. அதைத் தவிர்த்து விட்டு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் கார் பந்தயம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? 

அந்தப் பந்தயத்திற்கு முன்பாக மழை பெய்தது. அடுத்த அரை மணி நேரத்தில் மழை நீரை அப்புறப்படுத்தி இந்த போட்டியை நடத்தினார்கள். ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற இந்த மூன்றரை ஆண்டுகளில் மழை வரும் போதெல்லாம் சென்னை மக்கள் மழை வெள்ள பாதிப்பால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

ஒவ்வொரு முறையும் மக்கள் பாதிக்கப்பட்டப் பிறகுதான், அரசு விழித்துக் கொண்டு செயலாற்றும் என்றால், அது அரசின் நிர்வாகத் திறமையின்மையும், அலட்சியமும் தான் என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆகையால் முதலமைச்சர் இனியாவது வருகின்ற (மழை காலங்களில்) நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களை பாதுகாத்து நோய் தொற்று ஏற்படாவண்ணம் தடுக்க முன்னெச்சரிக்கை மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்." என்று கூறியுள்ளார். 

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!