undefined

திருமணமான 5 மாதத்தில் நடந்த விபரீதம்.. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.. கணவரிடம் தீவிர விசாரணை!

 

விழுப்புரம் மாவட்டம், பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் மகள் யோகேஸ்வரி (22). இவர் கடந்த 2 ஆண்டுகளாக செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். யோகேஸ்வரி தனது உறவினர் கணேஷை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கணேஷ் யோகேஸ்வரியை பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2 பேரும் சிங்கபெருமாள் கோயில் அருகே மண்டப தெருவில் தனி வீட்டில் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கணேஷ், தனது தாய், தந்தையை பார்க்க சொந்த ஊருக்கு சென்றதாக யோகேஸ்வரிடம் கூறியுள்ளார். யோகேஸ்வரி செல்ல மறுத்த கணேஷிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. வழக்கம் போல் கணேஷ் இரவு வேலைக்கு சென்று விட்டு காலையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, ​​வீட்டின் கதவை தட்டியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த கணேஷ் ஜன்னல் வழியாக பார்த்தபோது, ​​யோகேஸ்வரி மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணேஷ், மறைமலை நகர் போலீசில் புகார் செய்தார்.

அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து யோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, இறந்த யோகேஸ்வரியின் தந்தை வடிவேல், தனது மகள் சாவில் சந்தேகம் அடைந்து மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை