undefined

’என்ன காப்பாத்துங்க’.. காவல் நிலையத்தில் புகார் அளித்து திரும்பிய விவசாயி கொடூரமாக வெட்டிக் கொலை!

 

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 50). விவசாயியான இவர், இறால் பண்ணை நடத்தி வருகிறார். இவரது உறவினரான அய்யம்பேட்டை அருகே உள்ள பசுபதி கோயிலை சேர்ந்த செந்தில் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே ஒரு வாரத்திற்கு முன் தகராறு ஏற்பட்டது.இதுகுறித்து அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் செந்தில் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே, காட்டுக்குறிச்சியைச் சேர்ந்த செந்தில், ஜெயக்குமார் மற்றும் அவரது நண்பர் பிரவீன் (28) ஆகியோர் நேற்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு புகார் அளிக்கச் சென்றனர். அங்கு அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சொன்னார்கள். இதையடுத்து ஜெயக்குமார், செந்தில், பிரவீன் ஆகியோர் நேற்று மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து அய்யம்பேட்டை காவல் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தனர். பின்னர் பசுபதி கோவில் அருகே சென்றபோது, காரை வழிமறித்த சிலர், ஜெயக்குமார், செந்தில், பிரவீன் ஆகிய 3 பேரையும் ஆயுதங்களால் கொடூரமாக தாக்கினர்.

இதில் பலத்த காயமடைந்த ஜெயக்குமார், பிரவீன் ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜெயக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரவீன் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அய்யம்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்