undefined

’நான் என்ன செத்துட்டேனா’.. அடக்கம் செய்ய முயன்ற போது எழுந்து உட்கார்ந்த மூதாட்டி!

 

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியத்தில் துவரங்குறிச்சி அருகே உள்ளது வேளக்குறிச்சி எஸ்.மேட்டுப்பட்டி. இந்த கிராமத்தில் வசிப்பவர் பம்பைன். இவரது மனைவி சின்னம்மாள் (வயது 60). உடல்நிலை சரியில்லாமல் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் மரணம் தருவாயில் இருந்த அவரை உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். பின்னர், அந்த பெண் இறந்துவிட்டதாக கருதிய உறவினர்கள், அவருக்கு இறுதி சடங்கு செய்ய ஏற்பாடு செய்தனர்.

அனைத்து ஊர்களிலிருந்தும் உறவினர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதியாக , அவர்கள் அந்த மூதாட்டியை இறுதிச் சடங்குகளுக்காக கல்லறைக்கு அழைத்துச் சென்றனர். மூதாட்டிக்கான இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, ​​அவர் திடீரென்று எழுந்து, 'நான் என்ன செத்துவிட்டேனா? நான் இன்னும் சாகவில்லை. என்னை எரிக்க போறீங்களா? நான் இன்னும் சாகவில்லை.' இதனால் அருகில் இருந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் மூதாட்டியை உடனடியாக தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்போது மூதாட்டி அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இறந்து விட்டதாக கருதி இறுதி சடங்கு செய்ய முயன்ற போது, ​​மூதாட்டி ஒருவர் கண் திறந்து எழுந்து உட்கார்ந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!