undefined

ஐஸ்வர்யம் பெருகும்... லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் இது தான்!

 

இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. இந்த நேரத்தில் லட்சுமி பூஜை செய்ய உகந்த நேரத்தைத் தவற விடாதீங்க. தீபாலட்சுமி குபேர பூஜை என்பது செல்வத்திற்கு அதிபதியான குபேரரையும், அதை அவருக்கு அருளிய லட்சுமி தேவியையும் வழிபடும் இந்நன்னாளில் நம் பூஜையால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு.  அதில் மிக முக்கியமான பூஜை லட்சுமி குபேர பூஜை. இதற்கு மிகவும் உன்னதமான நாள் தீபாவளி திருநாள். லட்சுமி குபேர பூஜை என்பது செல்வத்திற்கு அதிபதியான குபேரரையும், அதை அவருக்கு அருளிய லட்சுமி தேவியையும் வழிபடுவதே லட்சுமி குபேர பூஜை. 

தீபாவளி பண்டிகையான இன்று காலையில் மேற்கொள்ளும் எண்ணெய்க் குளியல் அத்தனை முக்கியமே. வருடத்தில் இன்று ஒரு நாள்  மட்டுமே நல்லெண்ணெயில் மகாலட்சுமியும், சீயக்காய்ப் பொடியில் சரஸ்வதியும், தண்ணீரில் கங்கையும், சந்தனத்தில் பூமா தேவியும், குங்குமத்தில் கௌரியும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்புப் பலகாரத்தில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும் ஆவாஹனமாகி  இருப்பதாக ஐதிகம். எனவே தான் தீபாவளி எண்ணெய்க் குளியல் புனிதமானதாக கருதப்படுகிறது.  

தீபாவளி நாளான இன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் அல்லது காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் எண்ணெய்க் குளியல் மேற்கொள்ளலாம். தீபாவளி நாளில் செய்யும் எண்ணெய் குளியல் நீராடலை 'கங்கா ஸ்நானம்' என புனிதமாகச் அழைக்கின்றனர். 

இன்று அதிகாலை 04.00 மணி முதல்‌ 06.00 மணி வரை லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்‌. லட்சுமி குபேர பூஜையை தீபாவளி தினத்தில் செய்யும் போது நம் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதுடன் குபேரன் சகல ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்கிடுவார் என்பது ஐதீகம். நீங்கள் விரும்புவதை வாய்விட்டு கேளுங்கள். நிச்சயம் நிறைவேறும்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!