பகீர்.. .எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்து சித்திரவதை...  நாடாளுமன்றத்தில் அத்துமீறிய நபர்கள் பரபர குற்றச்சாட்டு..!

 

டிசம்பர் 13ஆம் தேதி மதியம், பார்வையாளர் மாடத்தில் இருந்து இரண்டு பேர் நாடாளுமன்ற மக்களவைக்குள் குதித்து வண்ண புகை குப்பிகளை வீசினர். சில எம்.பி.க்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டனர். அதற்குள் காவலர்கள் விரைந்து வந்து அவர்களை அழைத்துச் சென்றனர். குற்றம் சாட்டப்பட்ட சாகர் சர்மா, மனோரஞ்சன், டி, அமோல் ஷிண்டே, நீலம் ஆசாத், லலித் ஜா மற்றும் லோகேஷ் குமாவத் ஆகியோர் டிசம்பரில் கைது செய்யப்பட்டனர்.

குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்படும் வரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் கீழ் இருந்தனர். இந்த நிலையில், நீலம் ஆசாத் தவிர குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தனர். இது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஹர்தீப் கவுர் முன் ஆஜர்படுத்தப்பட்டது.

இது தொடர்பான விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில், மனோரஞ்சன், டி.சாகர் சர்மா, லலித் ஜா, அமோஜ் ஷிண்டே மற்றும் மகேஷ் குமாவத் ஆகியோர், 70க்கும் மேற்பட்ட வெற்றுத் தாள்களில் கட்டாயம் கையொப்பமிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் கூற்றுப்படி, "யுஏபிஏ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தேசிய அரசியல் கட்சிகளுடன் அவர்கள் தொடர்பு கொண்டுள்ளதாக ஒப்புக்கொள்ளுமாறு சித்திரவதை செய்யப்பட்டனர் மேலும் மின்சார அதிர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டனர் என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு பதில் மனு தாக்கல் செய்த நீதிமன்றம், விசாரணையை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட 6 பேரின் நீதிமன்றக் காவல் மார்ச் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் ஆறாவது குற்றவாளியான நீலம் ஆசாத், பல வெற்று காகிதங்களில் கையொப்பமிடுமாறு போலீசார் வற்புறுத்தியதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க