undefined

உன்ன ’டிஜிட்டல் அரெஸ்ட்’ பண்ணிட்டோம்.. 7 லட்சத்தை அமுக்கிய கும்பல்.. கதறும் ஐஐடி மாணவர்!

 

மும்பை ஐஐடியைச் சேர்ந்த 25 வயது மாணவர் ஒருவர் 'டிஜிட்டல் கைது' மோசடியில் ரூ.7.29 லட்சத்தை இழந்துள்ளார். கடந்த ஜூலை மாதம், மாணவனின் மொபைல் எண்ணுக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அவர் அழைப்பை எடுத்தபோது, ​​மறுமுனையில் இருந்தவர் தன்னை 'இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) அதிகாரி' என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும், மாணவனின் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி 17 முறைகேடான சம்பவங்கள் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், இந்த வழக்கு சைபர் கிரைம் போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சிறிது நேரம் கழித்து, போலீஸ் அதிகாரி போல் உடையணிந்த ஒருவர் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் மாணவனை தொடர்பு கொண்டார். மாணவனின் ஆதார் எண்ணை கேட்ட அந்த நபர், மாணவன் மீது பண மோசடி வழக்கு இருப்பதாகவும், உடனடியாக ரூ.29,500 அனுப்புமாறும் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில், போலீஸ் வேடமிட்டு வந்த நபர், "டிஜிட்டல் முறையில் உங்களை கைது செய்துள்ளோம். யாரையும் தொடர்பு கொள்ளவோ, பேசவோ வேண்டாம்" என கூறி மாணவனை மிரட்டியுள்ளார்.

மறுநாள் அந்த மாணவனுக்கு மீண்டும் அழைப்பு வந்தது. இம்முறை மாணவனின் வங்கி கணக்கு விவரங்களை மோசடி செய்தவர்கள் பெற்றுள்ளனர். இதையடுத்து மாணவனின் கணக்கில் இருந்து ரூ.7 லட்சத்தை எடுத்துள்ளனர். இனிமேல் எந்த பிரச்சனையும் வராது என்றும் மாணவனிடம் உறுதியளித்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, இது குறித்து விசாரித்ததில் தான் ஏமாற்றப்பட்டதை மாணவன் உணர்ந்தார். பின்னர், போலீசில் புகார் அளித்தார். இது குறித்து மும்பை போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!