undefined

 இன்றும் நாளையும் இந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்...  சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க!

 

சென்னையின் முக்கிய பகுதிகளில்  மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதனையடுத்து இன்று அக்டோபர் 23ம் தேதி  புதன்கிழமை காலை 8 மணி முதல் நாளை அக்டோபர் 24 ம் தேதி  மாலை 4 மணி வரை மண்டலம் 4 தண்டையார் பேட்டை பகுதிகள், மண்டலம் 5-க்கு உட்பட்ட புரசைவாக்கம்  , பெரியமேடு, சவுகார்பேட்டை, எழும்பூர், சிந்தாதிரிபேட்டை, மண்டலம் 6-க்கு உட்பட்ட ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூர், செம்பியம், மண்டலம் 8-க்கு உட்பட்ட புரசைவாக்கம் (பகுதி), கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லிஸ், மண்டலம் 9-க்கு உட்பட்ட திருவல்லிக்கேணி  பகுதிகளுக்கு குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.  

அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு குடிநீர் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான  https://cmwssb.tn.gov.in  மூலம் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!