வாகன ஓட்டிகளே உஷார்... இந்த சான்றிதழ் இல்லன்னா அபராதம்!
இந்தியா முழுவதும் சமீபகாலமாக பல்வேறு மாநிலங்களிலும் சாலை விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு போக்குவரத்து விதிகளை கடுமையாக்கியுள்ளது. வாகன ஓட்டிகள் பெரும்பாலும் போக்குவரத்து விதிகளை மீறுவதால் தான் சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனை தடுப்பதற்காக பல்வேறு விதிகளை போக்குவரத்து துறை அமல்படுத்தியுள்ளது.
அத்துடன் இதனை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் வாகன ஓட்டிகள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய 4 ஆவணங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது . இது இல்லையெனில் போக்குவரத்து போலீஸாரால் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி டிரைவர் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டியது அவசியம் . ஆர் சி எனப்படும் இந்த ரெஜிஸ்ட்ரேஷன் சர்டிபிகேட் இருக்க வேண்டும். இன்சூரன்ஸ் பாலிசி ஆவணம் இருக்க வேண்டும். முக்கியமாக மாசு கட்டுப்பாடு சான்றிதழ் வைத்திருக்க வேண்டியதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!