undefined

போர் பதற்றம்.. உக்ரைனில் செயல்படும் அமெரிக்க தூதரகம் மூடப்படுவதாக அறிவிப்பு!

 

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 1000வது நாளை எட்டியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன. எதிர் தாக்குதல் நடத்த தேவையான ஆயுதங்களையும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், ரஷ்யாவிற்குள் தொலைவில் உள்ள இலக்குகளை அடைந்து அழிக்கக்கூடிய ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

இதனால் கோபமடைந்த ரஷ்ய அதிபர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யப் படைகள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை அங்கீகரிக்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டார். தற்போது இரு நாடுகளுக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் பல பகுதிகளில் அமெரிக்கா தயாரித்த 6 நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் ஏவியது. இதில் 5 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவில் செயல்பட்டு வந்த அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தூதரகத்தில் உள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. கீவ் நகரின் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதலை நடத்தலாம் என்ற அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!