வக்பு திருத்தம், அதானி சர்ச்சை, ஒரே நாடு ஒரே தேர்தல்... எகிறும் எதிர்பார்ப்பு... இன்று முதல் குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்1
இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. “ஒரே நாடு ஒரே தேர்தல்” மற்றும் வக்பு சட்ட திருத்தம் உட்பட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில், அதானி மீதான அமெரிக்கா அதிகாரிகளின் லஞ்ச புகார் உட்பட பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதானியை கைது செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, “மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடரை இரு அவைகளிலும் நடத்த குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கி உள்ளார். நாளை நவம்பர் 26ம் தேதி நாடாளுமன்ற மையம் மண்டபத்தில் அரசியல் சாசனத்தின் 75ம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!