undefined

 சபரிமலையில் இன்று நடை திறப்பு... மகாராஜா பிறந்தநாளை முன்னிட்டு உற்சாகம்!

 
 


சபரிமலை ஐயப்பன் கோயிலில், சித்திரை திருநாள் மகாராஜா பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை நடை திறக்கப்பட்டு ஒருநாள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இன்று மாலை 5 மணிக்கு சித்திரை ஆட்டத் திருவிழாவுக்காகவும், சிறப்பு பூஜைகளுக்காகவும் சபரிமலை மேல்சாந்தி பி.என்.மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து, சன்னதியில் தீபம் ஏற்றுகிறார். 

ஆன்லைன் மூலமாக ஏற்கனவே முன்பதிவு செய்திருப்பதன் அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று மாலை நடை திறக்கப்பட்ட பின்னர் தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும். அதன் பின்னர் இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். 

அதே போன்று நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சித்திரை திருநாள் மகாராஜா பிறந்தநாள் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். பின்னர் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். 

இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு சீசன் வரும் நவம்பர் 16ம் தேதி தொடங்குவதை முன்னிட்டு நவம்பர் 15ம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!