அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆலோசனை!
தூத்துக்குடி மாவட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணி குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மு.விவேகானந்தன் ஆலோசனை நடத்தினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் 01.01.2025-னை தகுதிநாளாக கொண்டு நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள், 2025- னை ஆய்வு செய்திட இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மு.விவேகானந்தன், மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நகர்புற நிதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை புரிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
மேற்கண்ட கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணியில் மேற்கொள்ளப்படும் நடைமுறை குறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டு, அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை மற்றும் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து, முடிவு செய்திட, வாக்காளர் பட்டியல் பார்வையாளரால் தெரிவிக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து தகுதியான வாக்காளர் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இறந்த நபர்களின் பெயர்களை நீக்கம் செய்திடவும், 17 வயது மேற்பட்ட இளம் வாக்காளர்களை சேர்த்திடவும், அனைத்து வாக்காளர்களும் தங்களது ஆதார் எண்ணினை படிவம் 6பி மூலம் வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும் மேலும், ஆரோக்கியமான வாக்காளர் பட்டியல் வெளியிட அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, தேர்தல் வட்டாட்சியர் தில்லைபாண்டி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளான திமுக சார்பில் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன், ஐ.ரவி, எல்.அக்னல், ஜி.பாஸ்கர், அஇஅதிமுக சார்பில் ஏ.சந்தானம், பி.சரவணபெருமாள், சிபிஐ சார்பில் பி.கரும்பன், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் ஏ.எஸ்.பிரவின்துரை, சிபிஎம் சார்பில் டி.ராஜா, தேமுதிக. சார்பில் பி.துரைராஜ் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!