undefined

 வ.உ.சி. பிறந்த நாளை தேசிய வழக்கறிஞர்கள் தினமாக அறிவிக்க வேண்டும்... கொள்ளுப்பேத்தி கோரிக்கை!

 
 

இன்று நாடு முழுவதும் கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல், சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வ.உ.சி. பிறந்தநாளை தேசிய வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்டும் என்று வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப்பேத்தி செல்வி கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவில்பட்டியில் உள்ள அவரது கொள்ளுப்பேத்தியும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையுமான செல்வி தனது வீட்டில், வ.உ.சி.யின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் முழு உருவ வெண்கல சிலையை பாராளுமன்ற வளாகத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். மேலும் அவரது பிறந்த தினத்தை தேசிய வழக்கறிஞர்கள் நாளாக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் பாரத பிரதமரை சந்திக்க உள்ளேன்” என்று தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை