அடேங்...கப்பா.. ஆயா வேலைக்கு 83லட்சம் சம்பளம்....!!

 
குழந்தை பராமரிப்பு செய்ய ஆட்கள் தேவை என அமெரிக்க அதிபர் வேட்பாளரான விவேக் ராமசாமி அறிவித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

அமெரிக்க அதிபர் வேட்பாளரான விவேக் ராமசாமி தனது குழந்தைகளை கவனித்துக் கொள்ள குழந்தைப் பராமரிப்பாளர் ஒருவரைத் தேடி வருவதாக கூறப்படுகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோடீஸ்வரர் அபூர்வா டி ராமசாமியை மணந்தார், இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் EstateJobs.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வேலைக்கு, 26 வார வேலைக்கு $100,000 மிகப்பெரிய சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 83 லட்சத்திற்கும் அதிகமாகும். தனியார் சமையல்காரர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பிற வீட்டுப் பணியாளர்களைத் தேடுவதற்காக பணக்காரர்களால் பதிவிடப்பட்ட வேலைகளை EstateJobs இணையதளம் பட்டியலிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த விளம்பர அறிவிப்பில் "ஆர்வம், சாகசம் மற்றும் நிலையான இயக்கம் ஆகியவை குடும்பத்தின் வாழ்க்கை முறையை வரையறுக்கின்றன. தனிப்பட்ட குடும்ப சாகசங்களில் பங்கேற்கும் போது, அவர்களின் குழந்தைகளின் வளர்ச்சி பங்களிக்கும், உயர்தர குடும்பத்தில் சேர இது ஒரு அரிய வாய்ப்பாகும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், வாரத்திற்கு 84-96 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 நாட்கள் வேலை செய்தால், 7 நாட்கள் விடுமுறை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் வீட்டுப் பணியாளர்கள் ஒரு சமையல்காரரை உள்ளடக்கியிருந்தாலும், இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர், உணவு தயாரித்தல் மற்றும் சத்தான சைவ விருப்பங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வீட்டில் உள்ள மற்ற பணியாளர் குழுவுடன் அவர் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவு, குழந்தைகளுக்கான தினசரி வழக்கத்தை அமைக்க உதவ வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராகவும், இதுதொடர்பான பணி அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.