undefined

மோடி மீண்டும் தமிழகம் வருகை?! வெளியான தகவல்!

 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் சூடுபிடிக்கத்தொடங்கி விட்டன, நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே, பிரதமர் மோடி தமிழகத்தில் அடுத்தடுத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு கன்னியாகுமரி, நெல்லை, துாத்துக்குடி, மதுரை, திருச்சி,கோவை, சேலம், திருப்பூர், சென்னையில் நடந்த பொதுக்கூட்டங்களில் பேசினார். கோவையில் பேரணியும் நடத்தினார். திமுக சார்பாக இந்தியா கூட்டணி பாஜக சார்பில் என்.டி.ஏ கூட்டணி அதிமுக சார்பில் ஒரு கூட்டணி இவர்கள் அல்லாமலம் நாம் தமிழர் கட்சி தனியே நாற்பது தொகுதளிலும் களம் காண்கிறது, இந்நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்.

 

 

இந்த பயணங்களின் போது, இதுவரை செல்லாத டெல்டா பகுதிகள், வேலுார், பெரம்ப லுார், திருவண்ணாமலை, தேனி, ராமநா தபுரம், விருதுநகர் உள்ளிட்ட தொகுதிகளில் பிரச்சாரம் செய்யும் வகையில் திட்டம் தயாராகிறது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், கோவை, குமரி, மதுரையில் பிரச்சாரம் செய்ய உள்ளார் எனவும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், தேர்தலுக்கு முன்பாக, பிரதமர் மோடி 3 முறை தமிழகம் வந்து பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . இதுதொடர்பாக, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, சுற்றுப்பயண திட்ட குழுவுடன் ஆலோசித்து வருகிறார். அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, உள்ளிட்ட 18 மத்திய அமைச்சர்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்