தமிழகத்தில் அதிகரிக்கும் வன்முறை... வாலிபருக்கு கொலை மிரட்டல்... 5 சிறுவர்கள் உட்பட 8 பேர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பெயிண்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 5 இளஞ்சிறார் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கூசாலிபட்டி மேட்டுத் தெருவைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் வெற்றிவேல் (44). வண்ணம் பூசும் தொழிலாளியான இவர், உறவினரும் சுமை தூக்கும் தொழிலாளியுமான மாரியப்பன் என்பவருடன் அரிசி சுமை எடுத்துக் கொண்டு வந்தாராம்.
அப்போது, இளைஞர் ஒருவர் தள்ளாடியபடி மாரியப்பன் மீது விழுந்துள்ளார். அந்த இளைஞரை வெற்றிவேல் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, அந்த இளைஞர் உள்பட 8 பேர் கும்பல் மாரியப்பனிடம் தகராறு செய்ததுடன், தட்டிக்கேட்ட வெற்றிவேலை தாக்கினராம். அப்பகுதியினர் வந்ததும் அவர்கள் தப்பியோடி விட்டனர்.
இதில் காயமடைந்த வெற்றிவேல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, மூப்பன்பட்டி திருமங்கை நகர் ஞானசேகர் மகன் முகில்ராஜ் (19), கூசாலிபட்டி மேட்டுத் தெரு கோவிந்தராஜ் மகன் கார்த்திக் (20), சாஸ்திரி நகர் காளிபாண்டி மகன் ஆனந்த் (19), 17 வயதுக்குள்பட்ட 5 இளஞ்சிறார் ஆகிய 8 பேரைக் கைது செய்தனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!