undefined

பழங்குடியின குழுக்களிடையே தொடரும் வன்முறை.. பலி எண்ணிக்கை 76 ஆக உயர்வு!

 

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் லோயர் குர்ரம் மாவட்டத்தில் பழங்குடியின குழுக்களிடையே மோதல்கள் தொடர்கின்றன. ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வரும் இந்த மோதலில் பலர் பலியாகியுள்ளனர். சமீபத்தில் வாகனத்தில் வந்த 40 பேர் பின்னால் இருந்து திடீரென தாக்கப்பட்டனர். மண்டோரி சர்கெல் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதே மாவட்டத்தின் பாகன் கிராமப் பகுதியில் மற்றொரு தாக்குதல் நடந்தது. துப்பாக்கிச் சூடு, தீ வைத்தல் உள்ளிட்ட தாக்குதல்களில் 21 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற அதிகாரிகள் நல்லிணக்கத்திற்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் மோதல் வெடித்தது.

கோஜாகரி, மடசாநகர், குஞ்ச் அலிஜாய் ஆகிய பகுதிகளில் நடந்த மோதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து, வன்முறையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!