undefined

  விரைவில் விநாயகர் சதுர்த்தி... எப்போது?  பூஜை செய்ய உகந்த நேரம்... முழு தகவல்கள்!

 


உலகம் முழுவதும் இந்துக்களின் பண்டிகைகளில் மிக மிக முக்கியமானது  விநாயகர் சதுர்த்தி. முழு முதற்கடவுளாக போற்றப்படும் விநாயகர் அவதரித்த நாளை தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம்.  ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியிலே விநாயகப் பெருமான் அவதரித்தாக புராணங்கள் கூறுகின்றன.  ஆவணி மாதம் என்றாலே அது விநாயகருக்கு உரிய மாதம் தான்.  

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படும் என்றாலும் வடமாநிலங்களில் கணெஷ் சதுர்த்தியாக கொண்டாடுகின்றனர்.  அந்த வகையில் நடப்பாண்டுக்கான  விநாயகர் சதுர்த்தி  செப்டம்பர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருகிறது. சதுர்த்தி திதி  செப்டம்பர் மாதம் 6ம் தேதி பிற்பகல்  1.48 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் பிற்பகல் 3.38 மணி வரை வருகிறது. 6ம் தேதியே சதுர்த்தி திதி பிறந்தாலும்  சூரிய உதய நேரத்தில்  இருக்கும் திதியே அன்றைய தினத்தில் கணக்கில் கொள்ளப்படும்.

இதனால் அடுத்த தினமான செப்டம்பர் 7ம் தேதியே சதுர்த்ததி திதி கணக்கில் கொள்ளப்படும். இதனால் செப்டம்பர் 7ம் தேதியே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. செப்டம்பர் 7ம் தேதி  விநாயகர் சதுர்த்தி நாளில் காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை ராகு காலமும், பிற்பகல் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை எமகண்டமும் வருகிறது. இதனால், இந்த நேரம் தவிர்த்து பிற்பகல் 1 மணிக்கு முன்னதாக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை செய்யலாம். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை