undefined

 விஜய் இன்று இரவே தவெக மாநாட்டு திடலுக்கு வருகை? ... தொண்டர்கள் உற்சாகம்!

 
 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை  தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான திடலில் நாளை தவெக மாநாடு நடைபெற உள்ளது. இங்கு  விஜய் தங்குவதற்கு ஏற்ப விஐபி ரூம் வசதியும் செய்யப்பட்டுள்ளது.  சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கான இறுதிக்கட்ட பணி விக்கிரவாண்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்  விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு மக்கள் மத்தியில் நேரடியாக அவரை பார்க்கும் ஆர்வமும், அவரது பேச்சை கேட்கும் ஆர்வமும் அதிகரித்துள்ளது.  தமிழக வெற்றிக் கழக மாநாடு திடலுக்கு இன்றுரவு கட்சி தலைவர் விஜய் வர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் வாடகை வீட்டில் தங்க இருப்பதாகவும், அந்த வீட்டிற்கு நிர்வாகிகள் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு வந்து மாநாட்டின் பணிகளை கண்காணிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய், மாநாடு திடலுக்கு உள்ளே தங்குவதற்கு ஏற்ப கேரவன்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. தங்கும் இடத்தில் இருந்து கேரவன் மூலம் மாநாட்டு திடலுக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!