விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா காதல் உறுதி!
தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர நாயகன் விஜய் தேவர கொண்டா. இவரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் 2019 லிருந்தே காதல் சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள்.'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் விஜய் தேவரகொண்டா, கன்னட நடிகையான ராஷ்மிகா தெலுங்கில் அறிமுகமான, 'கீத கோவிந்தம்' திரைப்படத்தில் நேஷ்னல் கிரஷ்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் வெளியான இந்த படம், 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு... ரூ.132 கோடி வசூலை அள்ளியது. இதில் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா ஜோடியின் கெமிஸ்ட்ரியும் அதிகம் கவனிக்கப்பட்டது. 2019ல் மீண்டும் 'காம்ரேட்' படத்தில் நடித்தனர். இந்த படத்தில் இணைந்து நடிக்கும் போது தான் இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கியதாக கூறப்பட்டது.
ஆனால் கடந்த 5 வருடமாக இதை பற்றி எந்த ஒரு தகவலையும் பகிர்ந்து கொள்ளாத ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும்... அடிக்கடி வெளிநாடுகளுக்கு டேட்டிங் சென்று வருகின்றனர். ஒரே இடங்களுக்கு சென்று தனித்தனியாக புகைப்படம் வெளியிட்டு கிசுகிசுவில் சிக்கிவந்தனர்.
காதல் விவகாரத்துக்கு பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து நடிப்பதை இருவருமே தவிர்த்து வருகின்றனர். ராஷ்மிகா கீதா கோவிந்தம் வெற்றிக்கு பின்னர், தன்னுடைய காதலர் ரக்ஷித் ஷெட்டியுடன் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், விஜய் தேவரகொண்டாவிடம் நீங்கள் சிங்கிளா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, எனக்கு 35 வயதாகிறது நான் யாருடனாவது டேட்டிங் செய்யாமல் இருப்பேன் என நினைக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார். அதன் மூலம் தன்னுடைய ரிலேஷன்ஷிப்பை உறுதி செய்தார்.
புஷ்பா பட புரோமோஷனில்... ராஷ்மிகாவிடம் தொகுப்பாளினி அஞ்சனா, உங்கள் வருங்கால கணவர் திரைத்துறையை சேர்ந்தவரா? என கேட்க, இதற்கு ராஷ்மிகா, இதற்கான பதில் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான் என சொன்னதும் அனைவரும் வாயடைத்துப் போயினர். இருவருமே காதலிக்கும் தகவலை அடுத்தடுத்து வெளிப்படுத்தி வந்த நிலையில் தற்போது இவர்களின் லன்ச் டேட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் ஒன்றாக அமர்ந்து ஹோட்டலில் சாப்பிடும் புகைப்படம் இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படி வெளிப்படையாக டேட்டிங் செய்ய தொடங்கியதை அடுத்து விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!