undefined

நாலு புறமும் வீடியோ... மசாஜ் சென்டர்ல... பதறியடித்து ஓடிய இளம்பெண்கள்... எல்லை மீறிய பசங்களால பரபரப்பு!

 

திண்டுக்கல்  மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் மசாஜ் சென்டரில் இருந்து இளம்பெண்கள் பதறியடித்தப்படியே தலைதெறிக்க ஓடிய சம்பவம் கொடைக்கானல் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எதற்காக இப்படி இளம்பெண்கள் ஓடுகிறார்கள் என்று யோசிப்பதற்குள் பின்னாலேயே இளைஞர்கள் சிலர் கையில் செல்போனுடன் வீடியோ எடுத்தப்படியே அந்த பெண்களைத் துரத்திச் செல்கிறார்கள். ஏதோ ஷூட்டிங் போல என்று வேடிக்கைப் பார்த்தவர்களுக்கு மத்தியில், இது வேற ரகம் என அதிர வைத்திருக்கிறது. 

சென்னையில் இருந்து இளைஞர்கள் 4 பேர் வாகனம் ஒன்றில் கொடைக்கானலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று கொடைக்கானல் அண்ணா சாலை பகுதியில் அரசு அனுமதியுடன் செயல்பட்டு வரும் கர்நாடகாவை சேர்ந்த சதீஷ் என்பவரின் மஜாஜ் சென்டருக்கு 4 பேரும் சென்றனர்.அப்போது அந்த வாலிபர்களுக்கு மசாஜ் செய்த பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மசாஜ் உரிமையாளர் சதீசிடம் அந்த பெண்கள் தெரிவித்த போது, ​​மசாஜ் நடத்த அனுமதி உள்ளதா என சென்னை இளைஞர்கள் வாக்குவாதம் செய்வதாக கூறப்படுகிறது.

அதன்பின், மசாஜ் நிலையத்தின் உரிமையாளரான நான், அரசின் அனுமதியுடன் இந்த மசாஜ் நிலையத்தை நடத்தி வருகிறேன். நீங்கள் யார் என்று கேட்டதற்கு, ஒருவர் நிருபர், மற்றொருவர் போலீஸ், மூன்றாவது நபர் நான் வழக்கறிஞர் என்றார். இதனால் அச்சமடைந்த பணிபுரியும் பெண்கள் அங்கிருந்து வெளியேறி தப்பிக்க முயன்றனர். அப்போது, ​​செல்போனில் அவர்களை வீடியோவாக எடுத்து படம் பிடித்து, நாங்கள் சொன்னபடி செய்ய வேண்டும், இல்லையெனில் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வோம் என அந்த பெண்களை மிரட்டி, கதவை திறக்க விடாமல் தடுத்தனர்.

இதில், சென்னை வாலிபர்கள் மற்றும் மசாஜ் சென்டரில் பணிபுரியும் பெண்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், பெண்கள் அங்கிருந்து தப்பி, எப்போதும் பரபரப்பாக இருக்கும் அண்ணாசாலையில் பயந்து தலைதெறிக்க ஓடினர். அதையும் மீறி அந்த இளைஞர்கள் தொடர்ந்து வீடியோ எடுத்தபடியே பெண்கள் தங்கியிருந்த குடியிருப்பு வீட்டிற்கு சுமார் 500 மீட்டர் தூரம் வரை துரத்திச் சென்று பார்த்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் பத்திரிகையாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்ற போது, ​​எஞ்சியிருந்த சென்னை வாலிபர்கள் நாங்கள் பத்திரிகையாளர்கள் என்று கூறி அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதைத்தொடர்ந்து அங்குள்ள செய்தியாளர்கள் அவர்களை பிடித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பின், போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள் சென்னையை சேர்ந்த ஆர்யா, திவாகர், பிரேம், திருவண்ணாமலையை சேர்ந்த சாலமன் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, மசாஜ் நிலைய உரிமையாளர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 4 பேர் மீதும் கொள்ளை, பாலியல் துன்புறுத்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் மீது வேறு ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!