வீடியோ.. பட்டாசு வெடித்து , இனிப்பு வழங்கி கைதை கொண்டாடும் நடிகை ரோஜா!! 

 

நடிகையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரும், ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சர்  ரோஜா  சந்திரபாபு நாயுடு கைதை   கொண்டாடும் வகையில்   நகரியில் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து அதகளப்படுத்தியுள்ளார். ஆந்திராவில் முழு அடைப்பு காரணமாக  மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் கடைகள், அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.  பேருந்துகள் இயங்கவில்லை. திருப்பதி - திருமலை இடையே மட்டும் ஒன்றிரண்டு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  . ஆந்திர தெலுங்கு தேசம் கட்சியினர் மறியல், தர்ணாவில் ஈடுபட முயற்சிப்பதும் அவர்களைப் போலீஸார் கைது செய்வதும் தொடர்கிறது.

<a href=https://youtube.com/embed/BgsXD53_bW4?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/BgsXD53_bW4/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Minister Roja Celebrations Over Chandrababu Naidu Remand | Chandrababu Arrest | Mango News" width="752">

 தெலுங்கு தேசம் கட்சி  எம்எல்ஏ.,க்கள், எம்.பி.,க்கள், முன்னாள் அமைச்சர்கள்   முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜா சந்திரபாபு நாயுடு கைதை கொண்டாடி வரும் வீடியோ புகைப்படங்கள்  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு. இவர்  கடந்த 2014  முதல் 2019 வரை தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில்  முதல்வராக பதவி வகித்தவர்.  இவரது பதவி காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து ஆந்திர மாநில குற்ற புலனாய்வு துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 6 மணியளவில் சந்திரபாபு நாயுடு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.  விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு கோர்ட்டில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டாநிலையில்   சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா ஊழல் தடுப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து   ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவும் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.  ராஜமுந்திரி சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 23ம் தேதி வரை  நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு  விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது அவரது கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கடை அடைப்பு, கண்டனங்கள், போராட்டாங்கள் நடைபெற்று வருகின்றன.  இதனையடுத்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்கட்சியின் தலைவர்களை காவல் துறை வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  மாநிலம் முழுவதும்  முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுபல்வேறு கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  இதனால், ஆந்திர பிரதேசம் முழுவதும் பதற்ற நிலை காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திரா முழுவதும்  144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.இதனால்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை