’விடாமுயற்சி’ படத்தின் செகண்ட் லுக் .... கொண்டாடித்  தீர்க்கும் ரசிகர்கள்!

 
 

‘துணிவு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அஜர்பைஜான் நாட்டில் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. இதன் பிறகு ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில், இப்படத்தின் இரு புதிய போஸ்டர்களை படக்குழு நேற்று (ஜூலை 7) வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த மாதம் 30-ம் தேதி புதிய தோற்றம் வெளியான நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டு போஸ்டர்களை தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது.தற்போது வெளியாகியுள்ள செகண்ட் லுக் போஸ்டரில் பரபரப்பான ஆக்சன் காட்சியில் நடிகர் அஜித் கார் ஓட்டுவது போன்றும், கையில் துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருப்பது போன்றும் இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. இப்படங்களை வெளியிட்டு, “முயற்சிகள் ஒருபோதும் தோற்பதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!